X என்பதற்கு என்ன அர்த்தம்
நீங்கள் துணி வாங்கச் சென்றால் உங்களது அளவு XL, XXL என்று எல்லாம் வார்த்தைகளை உபயோகிப்பீர்கள்.
அதில் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனால் X என்பதற்கு என்ன அர்த்தம் என நினைத்ததுண்டா?
உண்மையில், ‘எக்ஸ்’ என்பதற்கு எக்ஸ்ட்ரா என்பது அர்த்தம்.
XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையும் குறிக்கிறது.
பொதுவாக XL அளவுள்ள சட்டை 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும். இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலங்கள் முதல் 46 அங்குலங்கள் வரை இருக்கும்.
இதேபோன்று S என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால், M என்றால் மீடியம் என்பதையும் குறிக்கும். ஆண்கள், பெண்கள் என அனைத்து ஆடைகளுக்கும் இதுவே குறியீடாகும்.
