இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் இலங்கை?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் இலங்கையின் வாய்ப்புகள் பல டெஸ்ட் தொடர்களின் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலில், இலங்கை தனது டெஸ்ட் தொடரில் நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் தோற்கடிக்க வேண்டும்.

இரண்டாவதாக, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தங்கள் கடைசி ஆட்டங்களில் குறைந்தது இரண்டு போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.

தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021- 2023 புள்ளிகள் அட்டவணையில் இலங்கை 53.33% அல்லது 64 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 75% அல்லது 108 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது, தென்னாப்பிரிக்கா 60% அல்லது 72 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியா 52.08% அல்லது 75 புள்ளிகளுடன் இலங்கைக்கு அடுத்ததாக இருக்கின்றது.  நியூசிலாந்து 25.93% அல்லது 28 புள்ளிகளுடன் 08வது இடத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021- 2023 புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து (112 புள்ளிகள்), பாகிஸ்தான் (56 புள்ளிகள்), மேற்கிந்தியத் தீவுகள் (54 புள்ளிகள்) மற்றும் வங்கதேசம் (16 புள்ளிகள்) என முதல் ஒன்பது இடங்களைப் பிடித்துள்ளன.