உலக நித்திரை தினம் (World Sleep Day)

உலக நித்திரை தினம் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

இது நித்திரை மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் நினைவுகூரப்படுகிறது.

ஆரோக்கியமான, சிறந்த நித்திரையின் பயன்களைக் கொண்டாடுவதும், நித்திரை பிரச்சினைகள் மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதும், நித்திரை கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.

தூக்கம்இ உறக்கம் அல்லது நித்திரை (Sleep) என்பது மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஓர் இயல்பான நிலை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, ஈருடக உயிரினங்கள், மீன்கள் என பல தரப்பட்ட உயிரினங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு தூக்கம் உயிர் வாழுவதற்கு அவசியமாகும். பொதுவாக உயிரினங்கள் படுத்து, கண்களை மூடி நித்திரை கொள்ளும்.

உங்கள் தூக்கத்தை ஏழு மணி நேரம் வரை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் வாழும் காலத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.