உலக சாதனை படைத்த மூதாட்டி காலமானார்

அமெரிக்காவின் இல்லினாய்ச் பகுதியில் கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக 13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த 104 வயது மூதாட்டி டோரதி ஹாப்னர் காலமானார்.

டோரத்தி, ப்ரூக்டேல் லேக் வியூ அவரது படுக்கையிலே இறந்து கிடந்தார் என்று அவரது நண்பர் ஜோ கானன்ட் கூறியதுடன் அவரது மரணத்தை உள்ளூர் ஊடகங்களும் இடைவிங் சங்கங்களும் உறுதி செய்துள்ளன.

இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங்கில் ஈடுபட்ட பின்னர் பயம் இல்லாதவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்று கூறினார். மேலும் உலக சாதனை நிகழ்த்திய ஹாப்னருக்கு இன்னும் சாதனைக்கான சான்றுகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்