
இம்ரான் கானின் மனைவியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள்
லண்டனில் வசிக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தின் வீட்டிற்குள் இனந்தெரியாத சிலர் நுழைய முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிசிடிவி காட்சிகளில் பதிவான புகைப்படத்தை ஜெமிமா கோல்ட்ஸ்மித் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“குறித்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர்களை யாரேனும் அடையாளம் காணக்கூடியவர்கள் இருந்தால், தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்” என கோல்ட்ஸ்மித் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
