
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் மோதல்
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை மும்பையில் இடம்பெறுகின்றது.
குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் இரண்டு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ளன.
இதில் இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்