T 20 மகளிர் உலகக் கிண்ணம் : இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி தகுதி

T 20 மகளிர் உலகக் கிண்ணம் : இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி தகுதி

T 20 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் தென்னாபிரிக்க மகளிர் அணி அவுஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

இதன்படி, நாளை தென்னாபிரிக்க மகளிர் அணி மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணி இடையிலான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்