யாழில் ஆட்டிறைச்சியால் உயிரிழந்த பெண்

ஆட்டிறைச்சி எலும்பு, மார்பு குருதிக்குழாயில் சிக்கிக் கொண்டதால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (46) என்பவரே உயிரிழந்தார். கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி இந்தப் பெண் ஆட்டிறைச்சி சாப்பிட்டார். இதன்போது எலும்பு தொண்மைக்குள் சிக்கியுள்ளது. இதையடுத்து, எலும்பு உள்ளே செல்வதற்காக வாழைப்பழம் சாப்பிட்டார். தொண்டையில் சிக்கிய எலும்பு, மார்பு வரை இறங்கியுள்ளது. மறுநாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

அவரது வாய் ஊடாக கமரா செலுத்தி ஆராய வைத்தியர்கள் முற்பட்டனர். எனினும், அதற்கு அனுமதிக்காத அந்தப் பெண், வீடு திரும்பி விட்டார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை குருதி வாந்தி எடுத்தார். உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடலில் கமரா செலுத்தப்பட்டு பரிசோதித்தபோது, ஆட்டிறைச்சி எலும்பு குருதிக்குழாயில் குத்தியதாலேயே குருதி வாந்தி ஏற்பட்டதென வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்