
4 கிலோ தங்கத்துடன் இருவர் கைது
புத்தளம்- பத்தனங்குண்டுவ தீவுக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் புத்தளம் குளத்தின் அடியில் இருந்து 04 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பொதி மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடத்தல்காரர்களால் பெறுமதியான தங்கம் நீருக்கடியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை சந்தேகிக்கின்றது. இந்த நடவடிக்கையின் மூலம் 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை கட்டளையில் பத்தனங்குண்டுவ தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, புத்தளம் குளத்தின் அடியிலிருந்து கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை மீட்டுள்ளனர்.
இதன்போது 04 கிலோவுக்கும் அதிகமான தங்கம் அடங்கிய பொதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 35 வயதுடைய கல்பிட்டியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
