‘டெடி பெயார்’ பொம்மைகளை தானமாக வழங்குமாறு விமல் வீரவன்ச கோரிக்கை!

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவருமான விமல் வீரவன்ச, மத்திய கிழக்கு மோதல்கள் சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள போர் எதிர்ப்புப் போராட்டத்திற்காக ‘டெடி பெயார்’ (Teddy Bears) பொம்மைகளை தானமாக வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், போருக்கு எதிரான எதிர்கால ஆர்ப்பாட்டமொன்றில் இந்த பொம்மைகள் அடையாள ரீதியாகப் பயன்படுத்தப்படும் என்றும், மோதல்கள் எவ்வாறு சிறுவர்களின் அமைதியான உலகத்தைப் பறிக்கின்றன என்பது குறித்த கவலையை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எந்த அளவிலான டெடி பியர் பொம்மைகளையும் மார்ச் 17-ஆம் திகதிக்கு முன்னர், பத்தரமுல்ல, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, இலக்கம் 428/1 இல் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்திற்கு வழங்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, சேகரிக்கப்பட்ட பொம்மைகள் போர் எதிர்ப்புப் கண்காட்சியின் போது, போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குரல்களின் அடையாளமாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்த முயற்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தேசிய சுதந்திர முன்னணி தொடர்பு இலக்கங்களையும் வழங்கியுள்ளது.