திருமணத்திற்கு பிறகு இப்படி நடக்குமா

திருமண வாழ்க்கையில் ஆண், பெண் இடையிலான பந்தம் மிகவும் பலமானதாக, ஆரோக்கியமானதாக இருக்கின்ற அதே வேளையில், சில சமயம் நம்மையே நாம் அந்த வாழ்க்கையினுள் தொலைத்து விடுகிறோம். அதாவது தனிநபருக்கான சுதந்திரத்தை இழந்து விடுகிறோம். என்னதான் நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு வட்டத்தினுள் சுருங்கி இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

குடும்ப வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சிகரமானது தான். உற்றார், உறவினர் என்று நம் மீது அன்பு செலுத்த நிறைய உறவுகள் இருப்பார்கள். அதே சமயத்தில் நாம் நம்மையே மறந்து, சுய அக்கறையின்றி வாழத் தொடங்கி விடுகிறோம். இதை சில அறிகுறிகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
நீங்களும் உங்களை தொலைத்து விடுகிறீர்களா: குடும்ப வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சிகரமானது தான். உற்றார், உறவினர் என்று நம் மீது அன்பு செலுத்த நிறைய உறவுகள் இருப்பார்கள். அதே சமயத்தில் நாம் நம்மையே மறந்து, சுய அக்கறையின்றி வாழத் தொடங்கி விடுகிறோம். இதை சில அறிகுறிகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

நம் வாழ்க்கைத் துணை எப்போதும் நம் கூடவே இருந்து கொண்டிருப்பார். நாம் செய்யும் எந்த ஒரு செயலும் அவருடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் இருவரும் சேர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பீர்கள். இருவரும் சேர்ந்து ஏதேனும் உள்ளரங்கு விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் மனதுக்கு பிடித்தமான இசையை தனியாக கேட்கவோ, கொஞ்சம் மன அமைதியோடு புத்தகம் வாசிக்கவோ உங்களுக்கு வாய்ப்பு இருக்காது.
நமக்கான நேரமின்றி போவது : நம் வாழ்க்கைத் துணை எப்போதும் நம் கூடவே இருந்து கொண்டிருப்பார். நாம் செய்யும் எந்த ஒரு செயலும் அவருடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் இருவரும் சேர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பீர்கள். இருவரும் சேர்ந்து ஏதேனும் உள்ளரங்கு விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் மனதுக்கு பிடித்தமான இசையை தனியாக கேட்கவோ, கொஞ்சம் மன அமைதியோடு புத்தகம் வாசிக்கவோ உங்களுக்கு வாய்ப்பு இருக்காது.

குடும்ப வாழ்க்கையில் மூழ்கி விட்டபடியால் உங்கள் நண்பர்களை சந்திப்பதை நீங்கள் தவிர்த்து வருவீர்கள். சுருக்கமாக சொல்லப் போனால், நண்பர்களை மறந்தே போவீர்கள் அவர்களது. ஃபோன் கால்களை அட்டென்ட் செய்து பேசுவதற்கு கூட உங்களுக்கு நேரம் இருக்காது. ஆரம்பத்தில் இது சாதாரணமாக தோன்றினாலும், நண்பர்கள் நம் வாழ்க்கையில் எப்போதும் அவசிய தேவை ஆகும். அதை உணரும் தருணத்தில் நம்மைச் சுற்றி நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.

சமூகத் தொடர்பு விலகுதல் : குடும்ப வாழ்க்கையில் மூழ்கி விட்டபடியால் உங்கள் நண்பர்களை சந்திப்பதை நீங்கள் தவிர்த்து வருவீர்கள். சுருக்கமாக சொல்லப் போனால், நண்பர்களை மறந்தே போவீர்கள் அவர்களது. ஃபோன் கால்களை அட்டென்ட் செய்து பேசுவதற்கு கூட உங்களுக்கு நேரம் இருக்காது. ஆரம்பத்தில் இது சாதாரணமாக தோன்றினாலும், நண்பர்கள் நம் வாழ்க்கையில் எப்போதும் அவசிய தேவை ஆகும். அதை உணரும் தருணத்தில் நம்மைச் சுற்றி நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.
உங்கள் சுய விருப்பங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க தொடங்கி விடுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணைக்கு என்ன பிடித்திருக்கிறதோ, அதுவே உங்களுக்கும் பிடித்தமானதாக மாறிப் போய்விடும். உதாரணத்திற்கு காலை டிபனாக நீங்கள் இட்லி சாப்பிட நினைத்துக் கொண்டிருக்கையில், உங்கள் வாழ்க்கை துணை பூரி வேண்டும் என்று சொன்னால் அதுவே உங்களுக்கான தேர்வாக அமைந்துவிடும்.

வாழ்க்கைத் துணையின் விருப்பத்திற்கு முன்னுரிமை : உங்கள் சுய விருப்பங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க தொடங்கி விடுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணைக்கு என்ன பிடித்திருக்கிறதோ, அதுவே உங்களுக்கும் பிடித்தமானதாக மாறிப் போய்விடும். உதாரணத்திற்கு காலை டிபனாக நீங்கள் இட்லி சாப்பிட நினைத்துக் கொண்டிருக்கையில், உங்கள் வாழ்க்கை துணை பூரி வேண்டும் என்று சொன்னால் அதுவே உங்களுக்கான தேர்வாக அமைந்துவிடும்.

குடும்ப வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் ஆண், பெண் இருவர் இணைந்து, ஆலோசித்து முடிவெடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், சில சமயம் உங்கள் கருத்துக்களுக்கு அங்கு இடமில்லாமல் போகும். உங்கள் வாழ்க்கை துணை என்ன முடிவு செய்கிறார்களோ அதுவே உங்கள் முடிவாக மாறிப்போகும்
தனித்த முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல் : குடும்ப வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் ஆண், பெண் இருவர் இணைந்து, ஆலோசித்து முடிவெடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், சில சமயம் உங்கள் கருத்துக்களுக்கு அங்கு இடமில்லாமல் போகும். உங்கள் வாழ்க்கை துணை என்ன முடிவு செய்கிறார்களோ அதுவே உங்கள் முடிவாக மாறிப்போகும்.

திருமண வாழ்க்கைக்கு முன்பு இருந்த இலக்கு நோக்கி நீங்கள் பயணிக்க முடியாது. உங்களுக்கு என்று தனித்த கனவுகள் இப்போது இருக்காது. இருவருக்கும் பொதுவான விருப்பம் எதுவென்று நினைக்கிறீர்களோ அதுவே இறுதித் தேர்வாக அமையும். மேலே சொன்னது எல்லாம் பொதுவானது என்றாலும் தம்பதிக்குள் சரியான புரிதல் இருந்தால் திருமண வாழ்க்கையும் நமக்கு பிடித்த ஒன்றாகவே முழு சுதந்திரத்துடன் இருக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

கனவுகளை இழப்பது : திருமண வாழ்க்கைக்கு முன்பு இருந்த இலக்கு நோக்கி நீங்கள் பயணிக்க முடியாது. உங்களுக்கு என்று தனித்த கனவுகள் இப்போது இருக்காது. இருவருக்கும் பொதுவான விருப்பம் எதுவென்று நினைக்கிறீர்களோ அதுவே இறுதித் தேர்வாக அமையும். மேலே சொன்னது எல்லாம் பொதுவானது என்றாலும் தம்பதிக்குள் சரியான புரிதல் இருந்தால் திருமண வாழ்க்கையும் நமக்கு பிடித்த ஒன்றாகவே முழு சுதந்திரத்துடன் இருக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை