‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதம் வெளியீடு?

‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று திங்கட்கிழமை தணிக்கை செய்யப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன்.

கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வெளியாகவிருந்த குறித்த திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று தணிக்கை செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எல்லாம் சுமூகமாக முடிந்தால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதமே கூட வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.