வட்ஸ் அப் (WhatsApp) நிறுவனம் இரண்டு புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
வட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) புதிய புதிய அப்டேட்களை குறுகிய கால இடைவெளிகளில் வெளியிட்ட வருகின்றனர்.
அந்த வகையில், வட்ஸ் அப்பில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான சனல் (channel) வசதி, இமோஜ் ரியாக்சன் அம்சம், வீடியோ சட் (Video Chat) வசதி ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தது.
தற்போது வட்ஸ் அப் நிறுவனம் கூடுதலாக இரண்டு புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
முதல் அப்டேட்டாக, வட்ஸ் அப்பில் தனிப்பட்ட சாட்களை போன்று வட்ஸ் அப் சேனலின் சட்களிலும் வொய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டாவதாக, சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்களை பயனர்கள் தங்களின் ஸ்டேட்டஸில் நேரடியாக பதிவிடும் புதிய வசதியை வட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
