இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய, இராணுவத்தினரும் பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பணியக அதிகாரிகளும் இணைந்து பாணந்துறை பிங்வத்தை பகுதியில் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 56 கிராம் 490 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 480,000 ரூபாய் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










