மழையுடனான வானிலை தொடரும்

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையும் பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.