நமுனுகுலை பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

-பதுளை நிருபர்-

நமுனுகுலை கனவரல்ல மௌசாகல்லை பகுதியில் அனர்த்த முகாமைத்துவத்தினரால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் கொடுகாத்தன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆண்கள் 4 பேரும் பெண்களில் 9 பேரும் ஆண் சிறுவர்கள் 8 பேரும் பெண் சிறுமிகள் 4 பேரும் மொத்தமாக 25 பேர் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.