நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காலி வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. (20-30)  மற்றும் மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரை பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ. (40-45) அதிகரிக்கலாம்.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோர கடற்பரப்புகளில் கடல் அலைகள் அதிகரித்து காணப்படுவதனால் மாலை வேளைகளில் கடல் அலைகள் சற்று கொந்தளிப்பாக காணப்படும்  என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.