
மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து தடை
-யாழ் நிருபர்-
வீசிய பலத்த காற்றினால் சேந்தாங்குளத்தில் இருந்து மாதகல் செல்லும் வீதியில் ஓரத்தில் நின்று மரம் இன்று வெள்ளிக்கிழமை காலை முறிந்து வீதிக்கு குறுக்காக விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனால் குறித்து வீதியூடாக பயணம் செய்த பயணிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரத்தினை வீதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

