நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பின், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்.

மழை பெய்யும் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடமையாற்றும் வளிமண்டலவியல் நிபுணர் ஸ்ரீமால் ஹேரத் தெரிவித்தார்.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சில சமயங்களில் அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான தன்மையை பெறலாம் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடலிலும், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலும் குளிக்கும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.