டெங்கு தொடர்பில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேவேளை காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் டெங்கு காரணமாக இந்த ஆண்டு இதுவரை நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் தகுதியுள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.