
பப்பாசி பயிர்களை தாக்கியுள்ள வைரஸ் நோய்: விவசாய குடும்பங்கள் பாதிப்பு
-மூதூர் நிருபர்-
பப்பாசி பயிர்களை தாக்கியுள்ள வைரஸ் நோயினால் பப்பாசி செய்கையை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம், திருகோணமலை நகர், கிண்ணியா, நிலாவெளி ,சம்பூர் போன்ற பிரதேசங்களிலும் இந்த நோய் தொற்று காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நோய் தாக்கத்தினால் விளைச்சல் குறைதல், காய் பழுதடைதல், தண்டு அழுகல், பப்பாசி இலைகள் மஞ்சள் நிறமாதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
பல்வேறு ரசாயனங்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்தியும் நோய் கட்டுப்படுத்தப்படாததால் விவசாயிகள் பப்பாசி செய்கையை முழுமையாக கைவிட வேண்டியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்று தருமாறு திருகோணமலை பப்பாசி செய்கையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
