விநாயகபுரம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேகம்

-தம்பிலுவில் நிருபர்-

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் நகரில் விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் இன்றைய தினம் திங்கட்கிழமை பல பக்த அடியவர்கள் சூழ மிக சிறப்பாக இடம்பெற்றது.

இவ் சங்காபிஷேகத்திற்கான பாற்குடப்பவனியானது விநாயகபுரம் சிவன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி விநாயகபுரம் பிரதான வீதி ஊடாக முத்துமாரி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

பாற்குடப்பவனியில் 50ற்கு மேற்பட்ட பக்த அடியவர்கள் கலந்து கொண்டதுடன்  சங்காபிஷேக நிகழ்வுகள் யாவும் பிரதகுரு சிவஸ்ரீ.ஆறுமுக கிருபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தாகசாந்தி நிகழ்வினை விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பு முன்னெடுத்ததுடன் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்