சுவிட்சர்லாந்தில் “விக்கி நவரட்ணத்தின்” இரு நூல்கள் வெளியீடு
சுவிட்சர்லாந்தில் விக்கி நவரட்ணத்தின் “என் வாசல் வந்த கங்கை” மற்றும் “மனதுக்குள் உறங்கும் மௌனம்” எனும் இரு நூல் வெளியீட்டு விழா கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வலே மாநிலத்தின் சியோன் நகரில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாலகுமரன் இரத்தினசபாபதி ( சைவநெறி கூடம் மார்த்தினி) கலாநிதி கல்லாறு சதீஸ் ( சுவிஸ் இலக்கிய சங்கத் தலைவர்) பூனகரி பொன்னம்பலம் முருகவேள் ( ஆசிரியர் பேர்ன் வள்ளுவன் பள்ளி) நமசிவாயம் தம்பிப்பிள்ளை ( லவுசான் மாநகரசபை உறுப்பினர்) சண் தவராஜா ( ஊடகவியலாளர்) , வித்தகன் சுரேஸ் செல்வரெட்ணம் (இலக்கிய விமர்சகர்) அ.பிறேமினி ( எழுத்தாளர்) ஜெயந்தி ஜீவா ஆகியோர் விழாச்சுடர் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
ஆரம்ப உரையினை பாலகுமரன் இரத்தினசபாபதியும் , கருத்துரையினை ஜெயந்தி ஜீவாவும் வழங்கியதையடுத்து கலாநிதி கல்லாறு சதீஸ் தலைமையில் சிறப்புரைகள் இடம்பெற்றன.
இதையடுத்து என் வாசல் வந்த கங்கை எனும் சிறுகதைத் தொகுப்பை கல்லாறு சதீஸ் வெளியீட்டு வைக்க முதல் பிரதிகளை கந்தையா மோட்சநாதன் மற்றும் தவராஜா சிவக்கொழுந்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும் மனதுக்குள் உறங்கும் மௌனம் எனும் கவிதைத் தொகுப்பை நமசிவாயம் தம்பிப்பிள்ளை வெளியீட்டு வைக்க முதல் நூல் பிரதியை மால்மருகன் அச்சுதன் பெற்றுக் கொண்டார்.இந்த நிகழ்வில் நடனம் மற்றும் பாடல் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் சுவிட்சர்லாந்தின் பலமாநிலங்களிலும் இருந்து பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை சிறப்பம்சமாகும்.


















