மாணவியின் புத்தகப் பைக்குள் விஷப் பாம்பு

ஹிங்குராக்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரின் புத்தகப் பையில் விஷப் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மாணவி மயிரிழையில் உயிர் தப்பி உள்ளதாகவும் ஹிகுராக்கொட கல்வி வலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வியாழக்கிழமை காலையில் பாடசாலைக்கு வந்த மாணவி பையை திறந்த போது பைக்குள் ஏதோ குளிர்ச்சியாக கையில் சிக்கியுள்ளது.

புத்தகப் பைக்குள் பாம்பு இருப்பதைப் பார்த்து மாணவி அலறி துடித்ததையடுத்து , ஆசிரியைகள் பாம்புடன் இருந்த புத்தகப் பையை வகுப்பறையில் இருந்து எடுத்துச் சென்று பாம்பை காட்டுக்குள் விடுவித்துள்ளனர்.

8 தரத்தில் கல்வி கற்கும் மாணவியின் வீட்டில் புத்தகப் பைக்குள் பாம்பு சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.