
அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு கோரிக்கை
சாலையில் அதிக புகையை வெளியிட்டு செல்லும் வாகனங்களின் புகைப்படங்களை எடுத்து, வாகன இலக்கம், நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்புமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்டி, கீழ் குறிப்பிட்டுள்ள இலக்கங்களை தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.
வட்ஸ்அப் (Whatapp) அல்லது வைபர் (Viber) :- 0703500525
மின்னஞ்சல் :- dmtvet@gmail.com
அவசர அழைப்பு இலக்கம் :- 0113100152
தொலைபேசி/தொலைநகல் :- 0112669915
இணையத்தளம் :- http://vet.lk/contact.html
அவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் வாகன புகைப் பரிசோதனை செய்யும் உத்தியோக்தர்கள் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
