மரக்கறி விலைகள் குறைப்பு : கொள்வனவு வீழ்ச்சி

காய்கறிகளின் விலை குறைந்தாலும், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் வாங்க வராத நிலை இருப்பதாக பொருளாதார மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் இருந்த போதிலும் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வர்த்தக சங்கத்தின் தலைவர் டி.என்.சில்வா தெரிவித்துள்ளார்.