வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நியமனம்
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாகவே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கையொப்பமிட்ட நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இன்று வியாழக்கிழமை பெற்றுக்கொண்டார்.