தெரு மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

-வாழைச்சேனை நிருபர்-

நகரை அழகுபடுத்தும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக பிரதேச மக்களின் நலனை கருத்தில் கொண்டு மிக நீண்ட காலமாக இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்த ஓட்டமாவடி MPCS வீதிக்கு தெரு மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் ஹயா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.நஜீம்தீன் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் அங்குரார்ப்பண வைபவம் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின், பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஹயா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எல்.நஜீம்தீன் இவ் வேலைத்திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது தவிசாளரினால் அவருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள்,  பிரதேசத்தின் சிவில் சமூக அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.