தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கு : வடிவேல் சுரேஸ் கண்டனம்

தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் மற்றுமொரு உயிர் பலியானதை தொடர்ந்து, இனியும் பொறுமை கிடையாது, என வடிவேல் சுரேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பசறை கனவரல்ல தோட்டத்தில் E.G.K பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் தொழில் புரியும் 24 வயதுடைய கணேசமூர்த்தி என்ற நபர் தோட்ட தொழிற்சங்க அதிகாரியின் வீட்டில் நீர் குழாய் திருத்துவதற்காக சென்ற வேளை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

எனவே உயிரிழந்த தொழிலாளியின் மரணத்திற்கு தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும், உயிரிழந்த தோட்டத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கப் பெற வேண்டும் .

இத்தகைய அசமந்த நிலைமை தொடர்ந்து நடைபெறாமல் இருக்க பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இயங்குகின்ற பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவு தோட்ட நிர்வாகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பு செய்தல் வேண்டும்

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற்று கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அப்பாவி தோட்டத் தொழிலாளியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.