Last updated on April 28th, 2023 at 03:28 pm

அமெரிக்காவில் இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகள்

அமெரிக்காவில் இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகள்

அமெரிக்காவில், இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் இவ்வேலை வாய்ப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன்மூலம் 250 தாதியர்களும், 100 ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களும், 200 தாதியர் உதவியாளர்களும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெற முடியும் அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முழுமையான துணை நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க