
அவசர சிகிச்சை வாகனங்களுக்கு தடையின்றி எரிபொருள்!
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அம்பியூலன்ஸ் எவ்வித தடையுமின்றி இயங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் மீண்டும் QR குறியீட்டு முறை மற்றும் எரிபொருள் ஒதுக்கீடு (Quota) அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவசர சிகிச்சை வாகனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்க, அவசர சிகிச்சை வாகனங்களுக்கு தடையின்றி எரிபொருள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
