வாய்பேச முடியாத பெற்றோர் மற்றும் சகோதரி : மாணவன் எடுத்த தவறான முடிவு

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை கொட்டமுதுன பகுதியில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் குறித்த மாணவனின் பெற்றோர் மற்றும் சகோதரி மூவரும் வாய்பேச முடியாத ஊமைகள் என பொலிஸார் தெரிவி்த்தனர்.

பதுளை பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலீப் டி சில்வா ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பியரத்ன ஏக்கநாயக்க தலைமையில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.