U-19 ஆசியக் கிண்ணம் ஆரம்பம்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை இன்று இன்று வெள்ளிக்கிழமை முதல் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத்தில் இலங்கை தனது முதல் போட்டியை இன்று காலை 10.30 மணிக்கு எதிர்கொள்ளவுள்ளது.

இந்த முறை போட்டியின் குழு E இல் போட்டியிடும் இலங்கை, ஆரம்ப சுற்றில் நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷை எதிர்கொள்ளும்.

அதன்படி இன்று இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் மோதவுள்ளன.

இதேவேளை குறித்த குழாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் மற்றும் குகதாஸ் மாதுலன் ஆகிய 2 வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.