
ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
-பதுளை நிருபர்-
ஐஸ் போதைப்பொருளுடன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 16 மில்லிகிராம் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை தெஹிகிடாகம பகுதியை சேர்ந்த 31 மற்றும் 24 வயதுடையவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடம் இருந்து குறித்த ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
