பலத்த காற்றுடன் கூடிய மழை : மரம் முறிந்து விழுந்து இரு மாணவிகள் படுகாயம்!

-மஸ்கெலியா நிருபர்-

கினிகத்தேன பகுதியில், நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக, இரண்டு பாடசாலை மாணவிகள் காயமடைந்துள்ளனர்.

அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று கன மழை பெய்ததுடன், பலத்த காற்று வீசியது. இதன்போது கினிகத்தேன பேருந்து நிலைய பகுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த, 13 மற்றும் 11 வயதுகளையுடைய பாடசாலை மாணவிகள் படுகாயமடைந்து, கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என தெரிவிக்கப்படுகின்றது.