
ரயிலுடன் கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு!
வத்தளை – எந்தேரமுல்ல ரயில் கடவையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
எந்தேரமுல்லயில் இருந்து வத்தளை நோக்கிப் பயணித்த கார் எச்சரிக்கை சமிக்ஞையை மீறி கடவையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காரில் பயணித்த பியகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரும் 34 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எந்தேரமுல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
