
யாழில் இருவேறு இடங்களில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைதான இளைஞனிடம் இருந்து 40 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. அவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை வீட்டில் வைத்து சஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபரான இளைஞர் 25 வயதுடையவர் என்றும் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
