
யாழில் இருவர் தோட்டாக்களுடன் கைது
யாழ்ப்பாணம், பளை பகுதியில் வைத்து ரீ-56 ரக 690 தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது, மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரின் பையில் பொதி செய்யப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தவில் மற்றும் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
