கிண்ணியாவில் சுனாமி ஆழிப்பேரலை நினைவு தினம் அனுஷ்டிப்பு
-கிண்ணியா நிருபர்-
சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆவது வருட நினைவு தினமான இன்று திங்கட்கிழமை கிண்ணியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நினைவு தினமானது, கிண்ணியா கடற்கரையில் உள்ள நினைவு தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம் பெற்றது.
இதில் 2004 .12.26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும், துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிண்ணியா கிளை உலமா சபை உறுப்பினர்கள், சூரா சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா உப்பாறு கடலூர் கோயிலிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான விசேட பூஜை வழிபாடும் கடல் மாதாவுக்கு கடலில் பூ தூவி அஞ்சலி நிகழ்வும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.