காதலனை வீட்டார் திட்டியதால் காதலி தற்கொலை

-திருகோணமலை நிருபர்-

தான் காதலித்து வந்த காதலனை வீட்டார் திட்டியதால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று திருகோணமலையில் பதிவாகியுள்ளது.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காதலித்து வந்த இளைஞன் சரியில்லை என தாயார் தனது மகளுக்கு புத்திமதி கூறியதையடுத்து இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த யுவதி அலத்தோட்டம்  ஆனந்த விநாயகர் வீதியில் வசித்து வரும் சிவக்குமார் கீர்த்தனா (18 வயது) எனவும் தெரிய வருகின்றது.

தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த யுவதியை திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.