திருகோணமலை கிரிக்கெட் வீரர்களுக்கு ‘ஸ்பென்ஸ் விருது’

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘டிவிஷன் 3 ‘ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை செவிப்புனற்றோர் மண்டபத்தில் இடம் பெற்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் கீழ் இயங்கி வரும் திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த டிவிஷன் 3 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ‘ஸ்பென்ஸ்’ விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.

கடந்த வருடம் இடம்பெற்ற இப்போட்டியில் சிறந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் விஷேட நிகழ்வு ஸ்பென்ஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் குகதாஸ் பிரகாஷ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் டி.தனேஸ்வரன் மற்றும் ஓய்வு பெற்ற உதவி கணக்காளர் நாயகம் தம்பு பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு வீரர்களுக்கு அன்பளிப்பு பொருட்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.