
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணம் வழங்கி வைப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை நகரில் இயங்கி வரும் ‘உதவும் கரங்கள் அமைப்பினால்’ பொது வைத்தியசாலை சிறுவர் வார்ட் (களம் 2) க்கு திரைச் சீலை மற்றும் கண் சத்திர சிகிச்சைக்கான பொருட்கள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ்.எஸ்.எச்.அன்சாரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது, உதவும் கரங்கள் அமைப்பின் அமைப்பாளரும், வைத்தியசாலை குழுவின் உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எஸ்.ஜவாஹிர் மற்றும் செயலாளர்.ஏ.ஆர்.றியாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.