தம்பலகாமத்தில் ரயிலுடன் மோதி சிறுவன் மரணம்

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயிலுடன் மோதி சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது பாலத்துக்கு அருகில் சக நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரயிலுடன் மோதியதாகவும் தெரியவருகின்றது

முள்ளிப்பொத்தானை யூனிட்-07 பகுதியில் வசித்து வந்த மாணவனான நளீம் முஹம்மது சப்ரிட் (வயது-14) எனவும் தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.