விவசாயிகளுக்கு பசளை போதாமையால் விளைச்சல் குறைவு என கவலை
-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட விவசாயிகள் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
யூரியா பசளை தற்போது வழங்கப்பட்டாலும் கூட அது போதாமையாகவுள்ளது, இதனால் போதிய விளைச்சலினை பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இரண்டரை ஏக்கருக்கு மட்டுமே பசளை வழங்கப்படுகிறது ஏனைய நிலங்களுக்கு தாம் என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
மானிய அடிப்படையில் தங்களுக்கு போதுமான யூரியா பசளைகளை வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.