
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி சலப்பையாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
பொலன்னறுவையிலிருந்து ஹாட்வெயார் பொருட்களை ஏற்றி வந்த லொறி துவிச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்விபத்தின் போது சலப்பையாறு- இரணைக்கேணி இரண்டாம் வட்டாரத்தில் வசித்து வந்த கைலாயபிள்ளை பஞ்சலிங்கம் (46வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிசார் தெரிவித்தனர்.


