தேர்தல் பிணக்குகள் தீர்த்தல் நிலையம்

-திருகோணமலை நிருபர்-

2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான மாவட்ட தேர்தல் பிணக்குகள் தீர்த்தல் நிலையம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை இவ்வலுவலகத்திற்கு முன்வைக்க முடியும்.

இந்நிலையத்தின் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதம கணக்காளர் நடேசு சற்கணேஸ்வரன், பட்டினமும் சூழலும் உதவி பிரதேச செயலாளர் எம்.டி.எல்.என்.குணதிலக்க, மாவட்ட செயலக கணக்காளர் ஏ.ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிலையான தொலைபேசி இலக்கம்  – 0263125044
பெக்ஸ் (Fax) – 0262227027
கைடயக்க தொலைபேசி/ வட்ஸ்அப் (whatsapp) – 0773065790
மின்னஞ்சல் (e-mail) – trinco.edr@gmail.com

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க