திருமலையில் ஆணின் சடலம் மீட்பு
திருகோணமலை -அலஸ்தோட்டம் கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை சென்ற இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சாம்பல்தீவு-சல்லி வாட்டு இலக்கம் 02யைச் சேர்ந்த ராஜலிங்கம் பிரபாகரன் (வயது – 38) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
