திருமலை விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி

-திருமலை நிருபர்-

திருகோணமலை – பன்குளம் பகுதியில் இடம்பெற்ற இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கோமரங்கடவெல-கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த அணில் சதுரசிங்க (வயது-53) என்பவரே உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.

கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த நபர் திருகோணமலைக்கு வருகை தந்து வீட்டுக்கு செல்லும்போது பன்குளம் – 4ஆம் கண்டம் பகுதியில் வைத்து யானை வீதியை கடக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளை மூலம் தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.