நானுஓயாவில் தடம்புரண்டது முச்சக்கரவண்டி: 2 பேர் காயம்

-நானுஓயா நிருபர்-

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நானுஓயாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணம் மேற்கொண்ட குறித்த முச்சக்கரவண்டியானது மிகவும் சரிவான ரதல்ல குறுக்கு வீதியில் அபாயகரமான வளைவில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்