கொம்பனித்தெருவின் பெயரை மாற்ற உத்தரவு

கொழும்பில் “Slave Island” (ஸ்லேவ் ஐலாண்ட்) என்ற ஆங்கிலப் பெயரை கொம்பன்ன வீதியாக உடனடியாக சிங்கள உச்சரிப்பில் மாற்றுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு இன்று தெரிவித்தார்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெயரை மாற்ற முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதன்படி பெயரை மாற்றுவதற்கு உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.

மூன்று மொழிகளில் எழுதப்படும். இதில் தமிழில் கொம்பனித் தெரு என தொடர்ந்து அழைக்கப்படும். பிரித்தானிய காலத்தில் இருந்து Slave Island” என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டது